ஜெய்-அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் ஜெய் தோசை சுட்டு அஞ்சலிக்கு கொடுத்த படமும், அதை வரவேற்று இருவரும் தெரிவித்த கருத்துக்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பலூன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிந்ததும் அஞ்சலியை மிஸ் பண்ணுவதாக ஜெய்யும், மகிழ்ச்சியான நேரம் மீண்டும் வரும் என்று அஞ்சலியும் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் அஞ்சலி பேட்டி ஒன்றில் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
நான் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க விரும்பவில்லை. சிறந்த படங்களில் நடிக்கவேண்டும். என் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். என் கைநிறைய படங்கள் இருக்கின்றன. இப்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். இப்போது எனக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. அப்படி எதுவும் நடந்தால் நிச்சயம் தெரிவிப்பேன். இப்போது என் சகோதரருக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.