-
மேஷம்
மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
-
கடகம்
கடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத் தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர் கள். உத்யோகத்தில் உங்களின் உழைப் பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
கன்னி
கன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு வந்து போகும். நண்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
-
துலாம்
துலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் வேலைச் சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படு வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப் படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
-
தனுசு
தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சகோதரர் களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
மகரம்
மகரம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார் கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.
-
கும்பம்
கும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
-
மீனம்
மீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். குடும்பத் தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.