இலங்கையில் விரைவில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு!

இலங்கையில் விரைவில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட மசகு எண்ணெய் கூட்டுத்தாபன சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சில பிரதேசங்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவையில் உள்ள மண்ணெண்ணெய் களஞ்சியத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சப்புகஸ்கந்தையில் மாத்திரமே மண்ணெண்ணெய் எஞ்சியுள்ளதாக மசகு எண்ணெய் கூட்டுத்தாபன சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.