H1N1 நோயை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பிரதேசங்களிலும் H1N1 நோயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

,இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிபில பிரதேசத்தில் இந்த நோய் தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்த செயலமர்வின் போது தேசிய கண்சிகிச்சை வேலைத்திட்டத்தின் கீழ் குளுக்கோமா நோய் பரிசோதனை, கண்ணில் வெள்ளை படருதல் ஆகியவற்றுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்வரும் பத்து வருட காலப்பகுதியில் பார்வையற்றோரின் தொகையை 25 சதவீதமாக குறைப்பதே இலக்காகும் என்று அவர் தெரிவித்தார்.

விஷன் 20- 20 வேலைத்திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார மேலும் குறிப்பிட்டார்.