யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவர் தனது கணவரால் கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயம் அடைந்த மனைவி யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அதி தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை நடைப்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
தனது மனைவி தகாத உறவை ஓர் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் பேனிவந்ததை அறிந்த கணவன் யாழ் திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவியை கோடாரியால் வெட்டியுள்ளார்.
இந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் கள்ளத்தனமாக கதிர்காமம் சென்று வந்துள்ளமையை அறிந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை இடமாற்றம் செய்திருந்தார்கள் என்பதோடு இந்த விபரங்களை அறிந்த கணவனே மனைவியை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலதிக விசாரணைகளை கோப்பாய் கொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.