ஜனாதிபதியை நோட்டம் விட்ட யாழ். இளைஞன்?

யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதாக இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாமரைத் தடாகம் அமைந்துள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரரான முருகையா சர்மலன் என்ற இந்த இளைஞனை கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரது தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக, அவரது சகோதரியின் அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.