ஊழல், மோசடிக்காரர்கள் தப்பிக்கவே முடியாது! தண்டனை நிச்சயம்: கயந்த கருணாதிலக

ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும். இதிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்களைச் சந்திக்கக் அவர், அந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் கருத்து

வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஊழல், மோசடிகளுக்கு இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது. எவரேனும் ஒருவர் மோசடியில் ஈடுபட்டியிருந்தால் தகுதி, தராதரம் பார்க்காது நிச்சயம் தண்டனை வழங்கப்படும்.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கையோடு, ஒருவரை குற்றவாளியென அடையாளப் படுத்திவிடமுடியாது.

உரிய விசாரணைகள் மூலம் அது உறுதிப்படுத்தப்படவேண்டும். அதற்குரிய பணிகளையே அரசு செய்து வருகின்றது. பல கட்டமைப்புகளும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

அதேவேளை, தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவந்த பின்னர் அதை நடைமுறைப்படுத்தாது அரசு மூடிமறைக்கும் என்றே கூறப்பட்டது.

ஆனால், பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் அதை அமுல்படுத்தியுள்ளோம். எந்தவொரு அரச நிறுவனங்களிலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.