பத்தாயிரம் கோடி ரூபா மோசடி! 60 விசாரணை அறிக்கைகள் நிறைவு! பலரை கைது செய்ய நடவடிக்கை

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடிகளை தொடர்பான, 60 விசாரணை அறிக்கைகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஒரு வருடத்திற்கு அதிக காலம் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது வருகிறது.

அதில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான விசாரணை அறிக்கையில், நிறைவு செய்யப்பட்ட 60 ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனை கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மஹிந்த ஆட்சி காலத்தில் கோடி கணக்கான பெறுமதியுடைய அரசாங்க சொத்துக்களை தவறான பயன்படுத்திய, பாரிய அளவு ஊழல் மோசடிகள் தொடர்பான அறிக்கைகள் இதற்குள் உள்ளடக்கப்படுகின்றது.

அவற்றிற்குள் கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள், பணம் மற்றும் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதற்கான அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல மோசடிக்கான விசாரணை அறிக்கை, முன்னாள் அரசியல்வாதிகள், அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் சபை அதிகாரிகள் உட்பட பல்வேறு பதவி வகித்த அதிகாரிகள், அவர்களின் உறவினர்களினால் அரசாங்க சொத்துக்களை மோசடியான முறையில் பயன்படுத்தியமைக்கான பல விசாரணைகள் இதற்குள் உள்ளடங்கப்படுகின்றது.

இந்த விசாரணை மேற்கொள்ளும் போது நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அந்த விசாரணைக்கான முறைப்பாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்துக் கொள்வதற்காக அதற்கான நிறுவனங்களுக்கு சென்று விசாரணைகளுக்கான தகவல் பெற்றுக் கொள்ளும் போது பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

விசாரணைகளின் போது நிறுவன அதிகாரிகளால் தகவல்களை மறைத்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கைகளுக்கு, சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கும் வரை காத்திருக்கின்ற நிலையில் அந்த சட்டமா அதிபர் ஆலோசனை விரைவில் கிடைக்குமாயின் அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என குறிப்பிடப்படுகின்றது