இரண்டு வருட அவகாசத்தை ஐ.நாவில் கோரும் இலங்கை! உறுதிப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைக் கோரும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிசெய்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை கோரவுள்ளது.

2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பை குறிப்பிட்ட தீர்மானம் மிகத் தெளிவாக இலங்கை அரசின் கரங்களிலேயே ஒப்படைத்துவிட்டது.

இது தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளையும் உள்நாட்டிடமே ஒப்படைத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.