அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் -ஐ முதன் முறையாக அடுத்த மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் சந்தித்து பேச இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
இத்தகவலை உறுதி செய்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் ,” இரு தலைவர்களும் அடுத்த மாதம் சந்தித்து பேசுவது உறுதி. ஆனால், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேதிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களின் சந்திப்பின் போது, சர்வதேச நாடுகளின் கண்டனத்தை பொருட்படுத்தாமல் ஏவுகணைகளை சோதித்து வரும் வட கொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.