அமெரிக்க அதிபராக டிரம் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு பாதுகாப்பு துறையை மறுகட்டமைப்பு செய்து வருகிறார். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள்-களை (ஆளில்லா விமானங்கள்) பயன்படுத்தி தாக்கி அழிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் ஒபாமா தனது பதவிக்காலத்தில் சி.ஐ.ஏ-வுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே அளித்திருந்தார். ஆனால், டிரம்ப் சி.ஐ.ஏ-வுக்கு நடைமுறைகளை மீறி அதிக அதிகாரங்கள் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு நபரைப் பற்றிய தகவல் மற்றும் அந்நபர் வசிக்கும் இடம் ஆகியவற்றை ட்ரோன்களில் பதிவு செய்தால், ஆளில்லாமல் இயங்கும் இந்த ட்ரோன்கள் அந்நபரை தாக்கி அழித்து விடும். கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த டுவின் டவர் தகர்ப்பு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா அழித்தது குறிப்பிடத்தக்கது.