இன்றைய ராசி பலன்கள் 16.03.2017

  • மேஷம்

    மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.  வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு, வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள் புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.