மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சிறையில் கம்பி எண்ணலாம் என நாம் தமிழர் சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அதிமுகவிடமிருந்து தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு வாக்கு செலுத்தினார்கள் தற்போது தமிழக முதல்வர் யார். ஒரே முதல்வராகி நாட்டை ஆள வேண்டும் என்றால் அனைவரும் தீபா பின்னால் தான் செல்ல வேண்டும்.
ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை நான் தொடர்வேன் என ஜெ.தீபா கூறுகிறார்.
ஜெயலலிதா ஒரு பணியையும் விட்டு செல்லவில்லை, ஒரு சனியை தான் விட்டுச்சென்றுள்ளார். இல்லையெனில், நான்கு ஆண்டு சிறைதண்டனை பாக்கி உள்ளது.
வேண்டுமானல் பெங்களூர் சிறை சென்று நான்கு ஆண்டு கம்பி எண்ணலாம் என கூறியுள்ளார்.