அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டசபையில் வரும் 2017 – 18ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நதி அமைச்சர் டி.ஜெயகுமார் இன்று தாக்கல் செய்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசு தாக்கல் செய்யப் போகும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கலாகவுள்ளது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உள்ளனர்.
கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் எதிர்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால் கூட்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.
மேலும் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திமுகவினர் மற்றும் ஓபிஎஸ் அணியினர் அமளியில் ஈடுபட்டால், அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் எவ்வாறு பதில் தரவேண்டும் எனவும், திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டால், அதிமுக உறுப்பினர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அமைதிக்காக வேண்டும் எனவும் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பெருந்துறை எம்.எல்.ஏ.தோப்பு வெங்கடாசலம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.