நிதி அமைச்சர் 2017-18ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கும் முன்பு ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் புகழ் பாடினார்.
தாலிக்கு தங்கமாய், நாங்கள் சட்டசபையில் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நீங்கள்தானம்மா என்று ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி நிதி அமைச்சர் பேசத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். திமுகவினர் கோஷம் எழுப்பினார்கள்.
இதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் என்ற முறையில் நாங்கள் பேசுகிறோம். இதனை ஏற்க வேண்டும் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜெயக்குமார் அமர்ந்தார். பின்னர் அவை முன்னவரும் கல்வி அமைச்சருமான செங்கோட்டையன் எழுந்து பொதுச் செயலாளர் பற்றி பேசுவதற்கு மரபுகள் இருக்கிறது என்று கூறினார். ஆனால் தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.