ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடக்கிறது. 2013-ம் ஆண்டு இந்த மைதானத்தில் சர்வதேச போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 3 ஒருநாள் போட்டி நடந்துள்ளது.
இந்தியா 2 போட்டியிலும், நியூசிலாந்து ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தன. இந்த மைதானத்தில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
இந்த டெஸ்ட் தொடரில் புனே மைதானத்திலும் டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்தது இல்லை என்று நடுவர் ஐ.சி.சி.யிடம் அறிக்கை சமர்பித்தார்.
இது மாதிரி ராஞ்சி ஆடுகளம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஞ்சியில் ஆஸ்திரேலிய அணி முதல்-முறையாக விளையாடுகிறது.