அழிவை எதிர்நோக்கியுள்ள சிங்கராஜ வனம்!

சிங்கராஜ வனம் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதிகளில் தேயிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக சிலர் காட்டுப்பகுதியை அழித்து வருவதால், நாளடைவில் இந்த நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வனத்தில் காணப்படும் மரங்களை அழிப்பதற்காக ரசாயண பதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் செழிப்பான நிலையில் காணப்பட்ட மரங்கள் யாவும் காய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காடழிப்பினால் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு ஆறுகளும் வற்றிப்போயுள்ளதாக பிரதேசத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் சிங்கராஜ வனம் அழிவடையும் அதே நேரம், கடுமையான வறட்சியையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென அச்சம் வெளியிட்டுள்ள மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.