சத்தீஸ்கார் மாநிலம் சுக்மா பகுதியில் சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு நடிகர் அக்ஷய் குமார் தலா ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
இது அக்ஷய் குமாரின் தேசப்பற்றையும், நாட்டின் மீதான பக்தியையும் பறைசாற்றுவதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.