தேவையான பொருட்கள் :
தினை ரவை – 250 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
வெங்காயம் – 50 கிராம்,
தக்காளி – 50 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
கேரட், பீன்ஸ், பட்டாணி – 100 கிராம்,
புதினா – சிறிது,
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – 750 மி.லி.,
சோம்பு – 20 கிராம்,
நெய் – சிறிது,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், புதினா, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு தினை ரவையை லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள்தூள், உப்பு, தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.
* தக்காளி பாதியளவு வெந்ததும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகள் நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதி வந்ததும் தினை ரவையை சேர்த்து, கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறி விடவும்.
* பிறகு கடாயை மூடிவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். சூடாக அலங்கரித்து பரிமாறவும்.
* தினை காய்கறி கிச்சடி ரெடி.