தீவிரவாத போக்கினை தற்போது உள்ள தமிழ் தலைமைகள் கைவிட்டுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கம்பளையில் இன்று இடம்பெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தற்போது கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆதரவினை வழங்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் தீவிரவாத போக்கினை கடைப்பிடித்த இவர்கள் தற்போது அரசியலமைப்பிற்கு ஆதரவை வழங்கி உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும், அரசியலமைப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சீர்திருத்தமே அன்றி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய செயற்குழு ஆகியவற்றிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.