கடந்த ஆட்சிக் காலத்தில் ராஜபக்ஸர்கள் மோசடி செய்த 2 ஆயிரம் மில்லியன் ரூபா சொத்துக்கள் அரச உடைமையாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் அவர்களது மோசடிகள் குறித்த தகவல்களை விரைவில் தெரியப்படுத்துவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இடம்பெற்று வந்த கொலை, கொள்ளை, திருட்டு, ஊழல்கள் அனைத்தையும் கோத்தா அவரது அறைக்குளேயே மறைத்து வைத்திருந்தார்.
இவ்வாறே யுத்த வெற்றிகளை வைத்து பல்வேறு மோசடிகளை உலக நாடுகளில் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் தற்போது இவர்கள் செய்ததில் முக்கியமான ஊடகவியலாளர் கொலை போன்ற குற்றங்கள் வெளிவரும் நிலையில் இருக்கின்றது.
இவர்கள் இழைத்த வெளிநாட்டு மோசடிகள் தொடர்பில் பலவேறு நாடுகளில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அங்கு கிடைக்கும் தகவலை பெற்றுக்கொண்டு முழு மோசடிகளையும் அம்பலப்படுத்துவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.