கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான திகதி அறிவிப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையை திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி விமான நிலையம் மீண்டும் திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜப்பான் அரசாங்கத்தின் 49 மில்லியன் நிதி உதவியுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்ற போதிலும் குறித்த காலத்திற்குள்ளேயே இதன் பணிகள் யாவும் முடிவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் ஏப்ரல் 6ஆம் திகதி திறந்துவைக்கப்பட உள்ளது.

முதலாம் கட்ட ஓடுபாதை திருத்தப்பணிகளே முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போது 10 மில்லியனாக காணப்படும் பயணிகளின் எண்ணிக்கையை 2020ஆம் ஆண்டளவில் 20 மில்லியனாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.