மருத்துவ பட்டத்தைப் பெறுவதற்காக எந்தப் பரீட்சைக்கும் முகங்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
உயர்கல்வி அமைச்சு அல்லது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் பரீட்சைகளை எதிர்கொள்ள எப்போதும் தயார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
மல்வத்து மாநாயக்க தேரரை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள மருத்துமனைகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் பணம் செலுத்தி வரமுடியும். அந்தச் சந்தர்ப்பத்தை தமக்கும் வழங்குமாறே தாம் கோருவதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.