மஹிந்தவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இராணுவம்! ஏற்படப் போகும் ஆபத்து

எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நாடு ஆபத்து ஒன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டமை மற்றும் இராணுவத்தினரின் ஆயுதங்கள் களைய செய்வதன் மூலம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மஹிந்த கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதுவரையில் நாட்டின் பாதுகாப்பு பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்றம் மத நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் சர்வதேசத்தை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையர்கள் 8 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் இங்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எவன்கார்ட் நிறுவனம் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காதென குறிப்பிட்டுள்ளார்.