ஜெ. சமாதியில் கருணாஸ் தியானம் : பன்னீர் அணிக்கு தாவுகிறார்:மனைவி சொல்லே மந்திரம்

பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க, எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

குறிப்பாக நடிகர் கருணாஸ் மிக மிக ஈடுபாட்டுடன் பற்பல நற்காரியங்கள், சேவைகள் செய்தார் என வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், கருணாஸ், தமிழரசு ஆகிய எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியவில்லை.

மக்களால் துரத்திவிடப்பட்டனர். மேலும்  கருணாஸ் குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது.
மனைவிக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மனைவி கருணாஸ்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால் அவர் ஓபிஎஸ் அணிக்கு தவுவதே சிறந்த செயல் என்று எண்ணி கருணாசிடம் பேசிவிட்டார் என்கிறார்கள்.

நேற்று டிடிவி தினகரன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்கவில்லை. தோப்பு வெங்கடாச்சலம், கருணாஸ், தனியரசு, தமிமும் அன்சாரி ஆகியோர் சசிகலா அணியில் நீடிக்க மனமில்லாமல் அதிருப்தியில் இருப்பதால் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அம்மா சமாதியில் தியானம் செய்யப் போவதாகவும்.. அங்கிருந்து பன்னீரைப் பார்த்து அவரோடு இணைவார் என்கிற செய்திகள் றெக்கை கட்டி பறக்கிறது.
ஆனால் பன்னீர் கருணாஸை ஏற்றுக் கொள்வாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி