கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிட்டமை சந்தேகத்திற்குரிய விடயமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலமாக வாசுதேவ நாடாளுமன்றத்தில் சட்டவிரோத குடியேற்றம் பிரச்சினை தொடர்பில், தொடர்ந்து கருத்து வெளியிட்டமை சந்தேகத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது.
மனித கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவருடன் வாசுதேவ நாணயக்கார நெருக்கமான உறவு வைத்திருப்பதே இதற்கு காரணமாகும்.
பல முறைகளில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஆறுக்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் தற்போது நாட்டினுள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாசுதேவ நாணயக்கார திடீரென சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம், சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவதற்காக மேற்கொள்ளும் செயற்பாடு என்ன என வினவியுள்ளார்.
இது தொடர்பான தகவல் ஒன்றை கொழும்பு ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.
டைட்டஸ் சபரமாது என்ற தொழிற்சங்க அமைப்பாளருடன் வாசுதேவ நாணயக்கார நெருக்கமான தொடர்பை வைத்துள்ளார். அவர் வாசுவின் நெருங்கிய நண்பர் என்றே கூறப்படுகின்றது. டைட்டஸ் சபரமாதுவினால் சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வெளியேற்றப்படவிருந்த 118 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் அண்மையில் திருகோணலை பாதுகாப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளனர்.
அதற்கமைய டைட்டஸ் சபரமாதுவிற்கு குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 வது பிரிவின் கீழ் மனித கடத்தலுக்கு உதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரினால் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வெளிநாட்டவர்களிடம் பெற்றுக் கொண்ட பணத்தை மீண்டும் செலுத்துமாறு தொடர்ந்து கூறப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சட்டவிரோத குடியேற்றவாசிகளை எப்போது அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள் என நாடாளுமன்றத்தில் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார். இதனாலேயே வாசுதேவ நாணயக்காரவும் மனித கடத்தலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.