மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
மாகாணசபைத் தேர்தல்களை உரிய நேரத்தில் அரசாங்கம் நடத்தும் என நம்புகின்றேன்.
உரிய நேரத்தில் தேர்தலை நடாத்தாமல் விடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
எல்லை நிர்ணய அறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்களே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட காரணமாகும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
சில மாகாணசபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் செபடம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
இந்த தேர்தலை ஒத்தி வைக்க அரசாங்கத்திற்கு அவகாசமில்லை.
மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்துள்ளார்.