“மேட்” பேரவையிலிருந்து தீபா கணவர் “மேடி” திடீர் விலகல்.. தனிக்கட்சி தொடங்கப் போறாராம்!

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் திடீரென விலகியுள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அண்மையில் தொடங்கினார்.

பேரவை தொடங்கியது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் தீபா கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சியை அறிவிக்கும் முன்பாக தீபா கணவர் மாதவன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து விலகிவிட்டதாகவும் மாதவன் அறிவித்துள்ளார். மேலும் தீபா பேரவை நடத்துவதாகவும், தாம் கட்சி நடத்த உள்ளதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.

மாதவனின் திடீர் விலகலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. கட்சி தொடங்கிய ஒரு மாதத்திற்குள் ஒரே குடும்பத்திற்குள் இன்னொரு கட்சியா?