எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சமீபத்தில் ஒரு அமைப்பை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் கணவர் மாதவன், இன்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு தான் புதிய கட்சி தொடங்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
கட்சியின் பெயரை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிப்பேன் என்ற அவர், தீபாவுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்றார்.
தொண்டர்களாம்
அப்படியானால் ஏன் திடீரென கட்சி தொடங்குகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, தொண்டர்கள் கோரிக்கையை ஏற்றுதான் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்றார்.
தனித்து இயங்க போகிறோம்
தீபா, பேரவை நடத்துகிறார், நான் கட்சி நடத்துகிறேன். இரண்டும் வேறு. நான் தனித்து இயங்கப்போகிறேன். பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் நிறைய இருக்கிறது. எனவே பேரவையில் தீபாவால் தனித்து இயங்க முடியவில்லை. எனவே நான் தனித்து செயல்பட முன் வந்துள்ளேன்.
குழப்ப சிகாமணி
ஆர்.கே.நகரில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு மக்களின் விருப்பத்தை கேட்டு செயல்படுவேன் என்றார். நிருபர்களின் கேள்விகள் பலவற்றுக்கும் தீபாவைவிட மோசமாக குழப்பியடித்து பதில் கூறியிருந்தார் மாதவன்.
முடியலப்பா சாமி
தீபாவுடன் முரண்பாடு கிடையாது என கூறிக்கொள்ளும் மாதவன், அவர் பேரவை நடத்துகிறார், நான் கட்சி நடத்துகிறேன் என்றும், ஒரே வீட்டில்தான் இருப்போம் என்றும் கூறினார். அடங்கப்பா, தலைய பிச்சிக்கலாம் போல இருக்கு சாமி.