மக்களின் கருத்தை கேட்டபின் ஆர்கே நகரில் போட்டியிடுவேன் என்று தீபா கணவர் மாதவன் அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சமீபத்தில் ஒரு அமைப்பை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் கணவர் மாதவன், இன்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு தான் புதிய கட்சி தொடங்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
ஜெயலலிதாவின் சாயலில் இருக்கும் அண்ணன் மகள் என்பதுதான் தீபாவுக்கு குறிப்பிட்ட மக்களிடம் ஆதரவை பெற்றுத் தந்தது. உங்களுக்கு எந்த நம்பிக்கை உள்ளது என்ற நிருபரின் கேள்விக்கு, நான் கடந்த 3 மாதங்களாக காலை முதல் மாலை வரை தொண்டர்களை சந்தித்தேன். அவர்கள் குறைகளை களைய யாருமே இல்லை. எனவே நான் கட்சி ஆரம்பித்தேன் என்றார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தொண்டர்களிடம் பேசிவிட்டு முடிவு செய்வேன் என்றார் மாதவன்.