பொருளாதாரத் தடை நீக்கம்: தாய்லாந்திலிருந்து ஈரான் அரிசி இறக்குமதி

அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகியவைகளை ஈரான் கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின.

ஆனால் இது எங்களது சொந்த விவகாரம் என்று கூறி அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளைக் கைவிட ஈரான் மறுத்தது.

இதனைத் தொடர்ந்து ஐ.நா கவுன்சில் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. தொடர்ந்து பல்வேறு நாடுகளின் முயற்சியால் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியது.

இந்த நிலையில், பொருளாதாரத் தடை நீங்கிய பின்னர் தாய்லாந்து நாட்டிலிருந்து 40,000 டன்கள் அரிசியை ஈரான் இறக்குமதி செய்துள்ளது.

ஈரானிற்கு 3,00,000 டன்கள் அரிசியை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக, கடந்த ஜனவரி மாதம் தாய்லாந்து நாட்டின் உயரதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.