ராஞ்சி சதம் மூலம் ரோகித் சர்மா, கெய்ல், ரெய்னா சாதனையுடன் இணைந்தார் மேக்ஸ்வெல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 180 பந்துகளை சந்தித்து முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 185 பந்தில் 104 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இந்த சதம் மூலம் மூன்று வகை (டெஸ்ட், 50 ஒவர் மற்றும் டி20 போட்டி) கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை படைத்த வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனே, நியூசிலாந்தின் கப்தில், பிராண்டன் மெக்கல்லம், தென்ஆப்பிரிக்காவின் டு பிளிசிஸ், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், வங்காள தேசத்தின் தமீம் இக்பால், பாகிஸ்தானின் அஹமது ஷேசாத் ஆகியோர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ளனர்.