இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போது முன்னணியில் உள்ள ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா) ஆகிய 4 கேப்டன்களையும் ஒப்பிட்டு பாருங்கள். அனைவரும் மிகச்சிறந்த வீரர்கள். ஆனால் மற்ற மூன்று பேரையும் விட விராட் கோலி ஒரு படி மேலே இருக்கிறார்.
கோலியின் பேட்டிங்கை உன்னிப்பாக கவனியுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள அனைத்து விதமான ஷாட்டுகளும் அவரது கைவசம் உள்ளது. தந்திரமாகவும் செயல்படுகிறார். அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் இது. குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகள் என்றால், எந்த வித ரிஸ்க்கும் எடுக்காமல் பந்தை பவுண்டரிகளுக்கு சாத்துகிறார். ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார். ஏற்கனவே குறிப்பிட்டது போல் மற்ற மூன்று வீரர்களும் சிறந்தவர்கள் தான். ஆனால் கோலி வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார்.
இவ்வாறு பிளின்டாப் கூறினார்.