மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிமிகுந்த கட்சியாக மாறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரத்மலானையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்படி கூறியுள்ளார்.
மக்களின் துணையுடன் வெற்றிபெறும் கட்சியே எமது கட்சி. வாக்குகளை உடைக்கும் மிகவும் கீழ்த்தரமான வேலைகளை நாம் செய்யப்போவதில்லை.
எமது தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தில் வழிநடத்தப்படும் எமது கட்சி விரைவில் பாரிய வெற்றிகளை அடைய இருக்கின்றது.
அத்துடன் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு தேர்தல்களைப் பிற்போடுவதன் மூலம் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது. எம்மீது எந்த வழக்குகளை தொடுத்தாலும் நாம் அஞ்சப்போவதில்லை.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வரும் தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் வெற்றிகளைப் பெற்று, எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி ஆக வருவார் என அவர் மேலும் தெரிவித்தார்.