மனித கடத்தல் பட்டியலில் மீண்டும் இலங்கை!

மனித கடத்தல் இடம்பெறும் நாடுகளில் நான்காவது முறையும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பொருட்டு சட்டவிரோதமாக செல்வதால் மனித கடத்தல் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபரீதமான நடவடிக்கையை கட்டுப்படுத்த தமது அமைச்சு பல திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.