தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதே அரசின் பிரதான நோக்கம்!

கிராமிய அபிவிருத்திகளை உயர்தி நாட்டில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கரமசிங்க இதனை தெரிவித்தார்.

காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்.

கல்வி நிலை, பொருளாதாரம் என்பவற்றில் நாட்டை மேலும் முன்னேற்ற வேண்டும்.

பாளங்களை அமைப்பதற்கும், வாவிகளை அமைப்பதற்கு மற்றும் விசாய பண்ணைகளை அமைப்பதற்கு இலங்கையர்களுக்கு இயலுமை உள்ளது.

எனவே கிராமிய பொருளாதாரத்தின் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் மக்கள் தமக்கு விளக்கமளிக்குமாறு பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரதமர் இதன் போது அழைப்பு விடுத்தார்.