உள்நாட்டு பிரச்சினைகளுக்கு சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை: ஜே.வி.பி

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்நாட்டு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறை ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று அரசாங்கத்தில் ஒருமித்த தீர்மானங்கள் எதுவுமில்லை. வலது கை செய்வது இடது கைக்கு தெரியாத நிலை காணப்படுகின்றது.

எமது நிலைப்பாடு தெளிவானது, நாட்டில் இல்லாத பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் மஹிந்த ராஜபக்சவேயாகும்.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிபை; பேரவையில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது அதனை மஹிந்தவினால் தோற்கடிக்க முடியவில்லை.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் இருந்து கொண்டே எம்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் ஊடாகவே விசாரிக்கப்பட வேண்டும்.

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு தீர்வுத் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.