தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை விடுதலை செய்யுமாறுஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல்இடம்பெற்றுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டிலேயே இந்தஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டளஸ் அழகப் பெரும, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டோர் அடங்கிய கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்,விமல்வீரவங்ச ஜனவரி மாதம் 10ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது