கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்ட வடகொரியா அதிகாரிகள்!!

கொழும்பில் நேற்று முன்தினம் ஆரம்பான கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க நான்குவடகொரியா பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் நாட்டுக்குள் வர கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனுமதிவழங்கப்படவில்லை என்று ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த கருத்தரங்கு வடகொரியா இலங்கை நட்புறவு சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவுடன் காணப்படும் உறவு காரணமாகவே குறித்த வடகொரியா பிரதிநிதிகளுக்குஅனுமதி வழங்கப்படவில்லை என அதிகாரிகள் கூறியதாக வடகொரியா இலங்கை நட்புறவுசங்கத்தின் செயலாளர் துமிந்த வல்பொல தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வில் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட மேலும் சில நாடுகளின்பிரதிநிதிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு வடகொரியா அதிகாரி ஒருவர், இலங்கையின் பிரதிபாதுகாப்பு அமைச்சரை சந்திக்க இலங்கைக்கு எதிராக ஐ. நா பாதுகாப்பு சபையில்குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.