இங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் முதலிடம்

இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இங்கிலாந்தில் ஆசிய பணக்காரர்கள் 101 பேர் உள்ளனர். அவர்களில் இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு 1,900 கோடி பவுண்ட். இவர்களுக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் லட்சுமி மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 1260 கோடி பவுண்ட்.

இவர்கள் தவிர 3-வது இடத்தில் இண்டோராமா கார்ப்பரேசன் (பெட்ரோ கெமிக்கல்ஸ்) தலைவர் பிரகாஷ் லோகியா உள்ளார். இவரது சொத்து மதிப்பு 400 கோடி பவுண்ட். வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் 4-வது இடத்தில் உள்ளார்.

ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்திருக்கும் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துஜா சகோதரர்கள் 4 பேர் ஆவர். அவர்களில் ஸ்ரீசந்த், கோபிசந்த் ஆகியோர் லண்டனில் உள்ளனர். பிரகாஷ் ஜெனிவாவிலும், அசோக் மும்பையிலம் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 250 கோடி பவுண்ட் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இவர்களை பணக்காரர் பட்டியலை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.