எகிப்து நாட்டை சேர்ந்த இமான் அகமது என்ற பெண்மணிக்கு, பக்கவாதம் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப்பிரச்சனைகளால் உடல் எடை அதிகரித்து உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்பட்டார்.
500 கிலோ எடை இருந்த இவர், சிகிச்சைக்காக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த 11-ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, முசாபல் லக்தவாலா தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இப்போது இமான் 360 கிலோவாக குறைந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல் பாகங்கள் தொடர்ந்து வீக்கமடையக்கூடிய கோளாறு சிறுவயது முதல் இமானுக்கு இருந்ததாகக் கூறிய மருத்துவர்கள், அவருக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குறைந்த உப்பு கொண்ட புரோட்டின் திரவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு வயிற்றைச் சுருங்கச் செய்யும் அறுவைசிகிச்சை முறை மேற்கொள்ளப்படுவதாக மும்பையின் சைஃபி மருத்துவமனை தெரிவித்துள்ளது.