அமெரிக்க நாட்டில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்துவரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிற வகையில் தேசிய அறிவியல் அறக்கட்டளை பிரசித்தி பெற்ற ‘கேரியர்’ விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறது.
இந்த ஆண்டு அந்த விருது பெற்றவர்களில் ஒருவர், அன்சுமலி ஸ்ரீவஸ்தவா. இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான இவர் அங்கு ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கம்ப்யூட்டர் ஆராய்ச்சியில் இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கேரியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் மேற்கு வங்காள மாநிலம், கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார். பி.எச்.டி. பட்டம் பெற்றதும் ஹூஸ்டன் ரைஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.