இலங்கை அரசு எவ்வித போர் குற்றங்களையும் நிகழ்த்தவில்லை என்றும், சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டே யுத்தன் நடைபெற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
இலங்கை அரசு எவ்வித போர் குற்றங்களையும் நிகழ்த்தவில்லை என்றும், சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டே யுத்தன் நடைபெற்றது.
சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்தே இலங்கை அரசு செயல்பட்டு வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு குற்றச்செயல்களை யுத்த காலத்தில் நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.