தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட மோகன்லால்

மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை தானே நிறைவேற்றிக்  கொண்டுள்ளார். அது என்னவென்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னால் கேரள தலைநகரான திருவனந்தபுரம் முழுவதும்  தனது சைக்கிளில் சுற்றிவந்தவர் மோகன்லால்.

ஆனால் நடிகராக மாறிய பின்னர் அவரால் ஒருமுறை கூட சாலைகளில் முன்பு போல போக முடியவில்லை. வெகு நாட்களாக  திருவனந்தபுரம் முழுவதும் தனது சைக்கிளிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசை தற்போது  நிறைவேறி உள்ளது.

கடந்த 20-ஆம் தேதி மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நள்ளிரவு வேளையில், தனது பழைய சைக்களை  எடுத்துக்கொண்டு புறப்பட்ட மோகன்லால், திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளில் மகிழ்ச்சியுடன் வலம் வந்துள்ளார்.  வெள்ளை வேஷ்டி, சட்டை உடுத்திக் கொண்டு சென்ற அவரது தோற்றம் பார்க்க `ஜில்லா’ படத்தில் அவரது தோற்றத்துக்கு ஒத்து  இருந்தது.