எனது நண்பரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும் நான் பயப்பட மாட்டேன் : ஆவேசத்தில் நிதியமைச்சர்

லசந்தவை கொலை செய்தவர் யார் என்பது எனக்குத் தெரியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கும் போது,

லசந்த விக்ரமதுங்க எனது நல்ல நண்பர் அவரை கொன்று விட்டார்கள். கொலை செய்தது யார் என்பதும் தெரியும். அந்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கொலையாளிகளின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் தாஜுதீன் கொலை வழக்கு மற்றும் அவன்கார்ட் கப்பல் வழக்கு போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கூடிய விரைவில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும். அதே போல ஒரு விடயம், நாம் எவருக்கும் பயந்தவர் அல்ல. பயப்பட வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.

அதன் காரணமாக தயவு செய்து அரசியல் இலாபங்களை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு நாட்டை முன்னேற்ற அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

சர்வதேசத்தின் மத்தியில் நல்லதோர் நிலையை இலங்கை பெற்றுள்ளது. அதனை கட்டிக்காத்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் அதற்காகவே நாம் முயற்சி செய்து கொண்டு வருகின்றோம் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.