தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல சசி தரப்பு முடிவு!

இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது வருத்தமளிப்பதாக சசிகலா தரப்பு அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைச்சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருப்பது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. 90 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படாது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

கட்சியை பிரிக்க ஓபிஎஸ் சதி செய்வதாக வைகைச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சின்னத்தை கட்சியையும் மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.