அதிமுக கட்சி, ஆட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இவை அனைத்தையும் உறுதியாக மீட்டெடுப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை காலை வெளியிட்டுள்ள அறி0க்கை:
அதிமுகவுக்கு எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதாவின் தொடர் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாட்சியுடன் கட்சியையும் ஆட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தமிழ் மக்களும் அதிமுக தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.