2033க்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: டிரம்ப் கையெழுத்திட்டார்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன் படி 2033 ஆம் ஆண்டு வாக்கில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கென 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மசோதாவின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவதோடு மட்டுமின்றி விண்வெளி ஆய்வுகள், ஒரியன் விண்கலத்திற்கான பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதுதவிர விண்வெளியில் மனிதர்களை அனுப்புவது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் செவ்வாய் கிரகத்தின் அருகில் அல்லது அதன் மேற்பரப்பில் மனிதர்கள் செல்ல ஏதுவான நீண்ட கால திட்டத்தினை வகுக்கவும், அதற்கான விண்கலத்தை உருவாக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து ஏற்கனவே அமெரிக்க அரசு பணிகளை செய்து வருகிறது.