சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்பாக அங்கிருந்த செய்தியாளர்களை தீபா சந்தித்து பேசியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட இந்த தொகுதி மக்கள்தான் காரணம். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், என்னுடைய வேட்புமனு தாக்கலை சிலர் திட்டமிட்டு தடுத்தனர். அதனை மீறியும் நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
எனக்கென்று மாற்று வேட்பாளர்கள் யாரும் கிடையாது. என்னுடைய தொண்டர்கள்தான் எனக்கு இருக்கின்ற மாற்று வேட்பாளர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.