சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி காலி.. அடுத்த அதிரடிக்கு தயாராகும் பன்னீர் அணி..

அதிமுக சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி என இரண்டாக பிரிந்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்த வாதம் நேற்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்தது.

அப்போது, பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார். அவர் வாதிடும் போது பலமான பல்வேறு காரணங்களை முன்வைத்தார். அதில் ஒன்று. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

தண்டனை பெற்ற குற்றவாளியான சசிகலா தேர்தலிலும் போட்டியிட முடியாது. வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம்பெறாது. இப்படிப்பட்ட ஒரு குற்றவாளி வேட்பாளரை பரிந்துரைப்பதும், அந்த வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்குவதும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்பதும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.

யூதண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தையே கேள்விக்குறியாக்க கூடியது என தனது வாதங்களை முன் வைத்தார். இந்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தேர்தல் ஆணையம் திணறியது. பதில் சொல்ல முடியாமல் மவுனமாக இருந்தது.